NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக சட்டப்பேரவை - ஓபிஎஸ் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக சட்டப்பேரவை - ஓபிஎஸ் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை 
    தமிழக சட்டப்பேரவை - ஓபிஎஸ் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை

    தமிழக சட்டப்பேரவை - ஓபிஎஸ் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை 

    எழுதியவர் Nivetha P
    Oct 09, 2023
    12:50 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிமுக பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சிலரை நீக்கியது செல்லும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இதனையடுத்து, அதிமுக'வினர் சட்டப்பேரவை தலைவரான அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு கடிதம் அளித்ததாக செய்திகள் வெளியானது.

    ஏற்கனவே இவர்கள் 2 முறை இதுகுறித்த கோரிக்கை வைத்தும், இன்று(அக்.,9) துவங்கியுள்ள சட்டப்பேரவை கூட்டத்திலும் எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கான இருக்கை ஓபிஎஸ்'கே ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதனால் கூட்டம் துவங்குவதற்கு முன்னர் எடப்பாடி கே பழனிசாமி அறையில் எம்எல்.ஏ.க்களுடனான சந்திப்பு நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது.

    அதன்படி மீண்டும் அதிமுகவினர் சட்டப்பேரவை தலைவரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து கோரிக்கையினை வைத்துள்ளனர்.

    சட்டப்பேரவை 

    பேரவை நிகழ்வுகளை பார்வையிடும் ஆஸ்திரேலியா நாடாளுமன்ற சபாநாயகர்

    ஓபிஎஸ் இருக்கையினை, ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கவேண்டும் என்று அவர்கள் கோரிய நிலையில், இம்முறையும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் மாற்றம் செய்யப்படாமல் ஓபிஎஸ்'கே ஒதுக்கப்பட்டது.

    இதனால் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் எடப்பாடி கே பழனிசாமி தனது அறையிலேயே உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் இன்றைய பேரவை நிகழ்வுகளை, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா நாடாளுமன்ற சபாநாயகர் மில்டன் டிக் தலைமையிலான 14 பேர் கொண்ட குழு பார்வையிட்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    முன்னதாக இக்குழுவினரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக மக்கள் சார்பில் வரவேற்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

    இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், காவிரி குறித்து முதல்வர் தனித்தீர்மானம் கொண்டுவர உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓ.பன்னீர் செல்வம்
    எடப்பாடி கே பழனிசாமி
    ஆஸ்திரேலியா
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஓ.பன்னீர் செல்வம்

    ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ். அதிமுக
    அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம் அதிமுக
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஜெயலலிதா

    எடப்பாடி கே பழனிசாமி

    அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு அதிமுக
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு ஓ.பன்னீர் செல்வம்
    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் தமிழக அரசு

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலக செய்திகள்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா

    மு.க ஸ்டாலின்

    'காலை உணவு திட்டம்' உருவான காரணம்: ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்  தமிழ்நாடு
    தமிழ்நாடு ஜிஎஸ்டிபி உயர்வு குறித்து பெருமிதம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு தமிழ்நாடு
    'இந்தியா' கூட்டணி - 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு குறித்த அறிவிப்பு எதிர்க்கட்சிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025