LOADING...
இனிமேல் மணி கணக்கில் கியூவில் நிற்க வேண்டாம்; தமிழகத்தின் முக்கிய கோயில்களில் புதிய தரிசன முறை
தமிழகத்தின் முக்கிய கோயில்களில் புதிய தரிசன முறை (representative image)

இனிமேல் மணி கணக்கில் கியூவில் நிற்க வேண்டாம்; தமிழகத்தின் முக்கிய கோயில்களில் புதிய தரிசன முறை

எழுதியவர் Venkatalakshmi V
May 27, 2026
09:48 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் விசேஷ நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சிரமப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, முதற்கட்டமாகச் சோதனை அடிப்படையில் 'நேர ஒதுக்கீட்டு தரிசன முறையை' அமல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் துறையின் செயலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய தரிசன மேலாண்மை குறித்து விரிவாக விவாதித்தனர்.

திட்டம்

புதிய தரிசன மேலாண்மைத் திட்டம்: முக்கிய அம்சங்கள்

பக்தர்கள் மணி கணக்கில் காத்திருப்பதைத் தடுத்து, எளிமையாகவும் விரைவாகவும் சுவாமி தரிசனம் செய்யப் பின்வரும் புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன: இனி பக்தர்கள் தங்களுக்கு வசதியான தேதியை ஆன்லைனில் தேர்வு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் போது குறிப்பிட்ட ஒரு மணிநேர அல்லது இரு மணிநேர 'டைம் ஸ்லாட்' ஒதுக்கப்படும். பக்தர்கள் அந்த நேரத்திற்கு மட்டும் கோயிலுக்குச் சென்றால் போதுமானது. சிறப்புத் தரிசனக் கட்டணச் சீட்டுகள் விநியோக முறையை டிஜிட்டல் மயமாக்கி முறைப்படுத்துதல். இத்திட்டம் முதற்கட்டமாகத் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக முக்கிய முதுநிலை கோயில்களில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும். அங்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் சாதக பாதகங்களை ஆராய்ந்த பின்னர், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து முக்கிய கோயில்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

Advertisement