
விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு சார்பாக, பெண்களுக்கான ஊக்கத்தொகை மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதற்காக தகுதியுடைய பெண்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் வங்கி கணக்கிற்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அனுப்பப்படும்.
இதற்கிடையே, இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில், திருநங்கைகளையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இது பற்றி பேசிய சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன், விரைவில் இதற்கான ஆவண செய்யப்படும் என்றும், திருநங்கைகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
இதற்காக தகுதியானவர்கள் விவரங்கள் சேகரிக்கும் பணியும் நடைபெறுவதாக அவர் மேலும் கூறினார்.
ஏற்கனவே மகளிருக்கான இலவச பேருந்தில், திருநங்கைகளும் பயணிக்கலாம் என முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
திருநங்கைகளுக்கும் உரிமை தொகை
திருநங்கைகளுக்கும் உரிமைத்தொகை?#ministergeethajeevan | #cmstalin | #magalirurimaithogai | #DMK | #NewsTamil24x7 pic.twitter.com/uuSOdX5Aaq
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) October 2, 2023