Loading...
அரசு ஊழியர்களுக்கு நிம்மதி; கடன் மற்றும் முன்பணம் பெற 6 ஆண்டுகள் தகுதி நீக்கம்; அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்களுக்கு கடன் மற்றும் முன்பணம் பெற 6 ஆண்டுகள் தகுதி நீக்கம்

அரசு ஊழியர்களுக்கு நிம்மதி; கடன் மற்றும் முன்பணம் பெற 6 ஆண்டுகள் தகுதி நீக்கம்; அரசாணை வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2026
01:26 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசு ஊழியர்கள் கடன் மற்றும் பல்வேறு முன்பணங்களை பெறுவதற்கான விதிமுறைகளை மேலும் எளிமையாக்கி தமிழ்நாடு அரசு முக்கிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மூலம் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதி நீக்கம்

6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற தகுதி நீக்கம்

இதுவரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, அரசு ஊழியர்கள் கடன் அல்லது முன்பணம் பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் வரை தொடர்ந்து பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.

தற்பொழுது வெளியாகியுள்ள புதிய அரசாணையின் மூலம் இந்த 6 ஆண்டுகள் பணி வரம்பு தகுதி நீக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதிய அரசு ஊழியர்களுக்கும் கடன் உதவிகள் விரைவில் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்பணத்திற்கான விண்ணப்பம்

தகுதிகாண் பருவம் முடிவடைந்தாலே முன்பணத்திற்கு விண்ணப்பிக்கலாம்

புதிய அரசாணையின்படி, அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள் தங்களின் தகுதிகாண் பருவத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தாலே போதுமானது.

தகுதிகாண் பருவம் முடிவடைந்த உடனேயே அவர்கள் கடன் மற்றும் முன்பணங்களுக்கு முறைப்படி விண்ணப்பிக்கத் தகுதி பெறுகிறார்கள்.

இந்த நிபந்தனை தளர்வு இளநிலை அரசு ஊழியர்களுக்கு பெரும் நிதியுதவியாகவும் ஊக்கமாகவும் அமையும் என அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT