Page Loader
தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு 
தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு

தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு 

எழுதியவர் Nivetha P
Oct 17, 2023
07:19 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது நிர்வாக காரணங்களால் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் தற்போது 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 10 மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல் மதுரை மாநகராட்சி ஆணையரான பிரவீன்குமார் சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த கே.தர்பகராஜ் தற்போது உயர்கல்வித்துறை துணை செயலாளராக இடமாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளார்.

இடமாற்றம் 

திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா சென்னைக்கு இடமாற்றம் 

இதனை தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி ஆணையராக தற்போது ஷேக் அப்துல் ரஹ்மான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, கோவைக்கு மாநகராட்சி ஆணையராக எம்.சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் கூடுதல் ஆட்சியராக பதவி வகிக்கப்பட்டிருந்த எல்.மதுபாலன் தற்போது மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா தற்போது சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பொள்ளாச்சி சார் ஆட்சியரான பிரியங்கா திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் தமிழக நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குனர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.