அரசு பள்ளி ஆசிரியர்கள் துறை மாறுதலுக்கு செல்லலாம் - பள்ளிக்கல்வித்துறை
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி,"பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டிற்கு கீழே இயங்கிவரும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை-மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி, இடைநிலைப்பட்டதாரி உள்ளிட்ட ஆசிரியர்கள் அவர்களின் குடும்பச்சூழல் மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு, அலகுவிட்டுஅலகு துறை மாறுதலுக்கு செல்லலாம்"என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வியிலிருந்து, கள்ளர் சீரமைப்புத்துறை, ஆதிதிராவிடநலத்துறை, மாநகராட்சி கல்வித்துறை மற்றும் மற்ற துறைகளுக்குகீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாறுதல் செய்துக்கொண்டு செல்ல, பள்ளிக்கல்வித்துறை அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் ஒன்றினை பெறவேண்டும் என்பது கட்டாயம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு சான்றிதழ்பெற, பதவி உயர்விற்கான ஆணை, பணிநியமன ஆணை, தற்போது வகிக்கும் பதவியிலுள்ள தகுதிகாண் பருவம் முடியும் ஆணையின் நகல் உள்ளிட்ட வேறுசில ஆவணங்கள் சமர்ப்பிக்கவேண்டும் என்பது குறிப்பிடவேண்டியவை.