Page Loader
திராவிட கழகத்தலைவரான கி.வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு 
திராவிட கழகத்தலைவரான கி.வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு

திராவிட கழகத்தலைவரான கி.வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு 

எழுதியவர் Nivetha P
Aug 02, 2023
01:42 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்திற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பாடுபட்டோருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த 2021ம் ஆண்டு முதல் 'தகைசால் தமிழர்' விருதினை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதனையடுத்து, 2023ம் ஆண்டிற்கான இந்த விருதினை, திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு வழங்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டமானது நடத்தப்பட்டு தேர்வு குழுவினர் அனைவரும் ஒருமனதாக கி.வீரமணி அவர்களை தேர்வு செய்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி ரூ.10 லட்சம் மதிப்பிலான காசோலை, பாராட்டு சான்றிதழ் உள்ளிட்டவை அவருக்கு வழங்கப்படவுள்ளது.

விருது 

போராட்டங்களில் பங்கேற்று 40 முறை சிறைக்கு சென்றவர் கி.வீரமணி 

மேலும், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடக்கவுள்ள சுதந்திர தின விழாவில் இந்த விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கி.வீரமணிக்கு வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது. தனது இளம் வயது முதல், பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள கி.வீரமணி, சமூக பாகுபாட்டிற்குள்ளான மக்களுக்கு ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று 40 முறை சிறைக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, அவர் கடந்த 1962ம் ஆண்டு, விடுதலை நாளிதழின் ஆசிரியராக பொறுப்பேற்று, 60 ஆண்டுகளையும் கடந்து பணிபுரிந்து வருகிறார். பன்னாட்டு தமிழர்களை ஒன்றிணைத்து பெரியாரின் பணிகளை மேற்கொண்டு வரும் இவர், தனது கருத்துக்களை இணையம் மூலமும் பரப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.