தமிழகத்தில் 2 கோடி பாமாயில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரிய நுகர்பொருள் வாணிப கழகம்
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தில் சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையிலும், அரசி இலவசமாகவும், அரிசிக்கு பதில் குறிப்பிட்டளவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் தமிழக சிறப்பு விநியோக திட்டத்தின் கீழ், ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் முதலிய பொருட்கள் தலா ரூ.25 என்னும் மானிய விலையில் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு இத்தகைய விநியோகத்திற்காக மாநில அரசு குறிப்பிட்ட விலையில் இந்த பொருட்களை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து வருகிறது என்று கூறப்படுகிறது.
ரூ.194.52 கோடி செலவில் கொள்முதல்
இதனை தொடர்ந்து, தற்போது பொது விநியோகம் செய்ய தேவையான ஒரு லிட்டர் அளவு கொண்ட பாமாயில் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்யவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதன்படி, ஒரு லிட்டர் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை ரூ.194.52 கோடி செலவில் கொள்முதல் செய்ய தேவையான ஒப்பந்தத்தை உணவு துறையின் கீழ் வரக்கூடிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கோரியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழக அரசு மூலம் பெறப்படும் இந்த பொது விநியோக திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.