LOADING...
விளிம்பு நிலை மக்களுக்கு ரூ. 2,000 சிறப்பு நிதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இன்று காலை முதல் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது

விளிம்பு நிலை மக்களுக்கு ரூ. 2,000 சிறப்பு நிதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2026
11:34 am

செய்தி முன்னோட்டம்

சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு "நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதி"யாக ரூ. 2,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிதி இன்று காலை முதல் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்துடன் இந்த ரூ. 2,000 சிறப்பு நிதியும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: முதியோர் மற்றும் கைம்பெண்கள்: மொத்தம் 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ. 3,200 (வழக்கமான ரூ. 1,200 + சிறப்பு நிதி ரூ. 2,000). மாற்றுத்திறனாளிகள்: 5.92 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ. 3,500(வழக்கமான ரூ. 1,500 + சிறப்பு நிதி ரூ. 2,000).

நலத்திட்ட உதவிகள்

தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள்

பராமரிப்பு உதவித்தொகை பெறுவோர்: 2.58 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4,000 (வழக்கமான ரூ. 2,000 + சிறப்பு நிதி ரூ. 2,000). மீனவர் குடும்பங்களுக்கான மீன்பிடித் தடைக்கால உதவித்தொகையாக ரூ. 8,000 வீதம் 1.62 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 8.53 கோடி நிதியையும் முதல்வர் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் (X) பக்கத்தில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்" என உறுதியளித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement