NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின் 
    சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின்

    சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின் 

    எழுதியவர் Nivetha P
    May 24, 2023
    10:58 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு தொழில்துறைக்காக முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்தாண்டு சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு தொழில் நிறுவனங்களின் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன்படி அவர் இன்று(மே.,24) மாலை சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

    இதற்காக அவர் நேற்று(மே.,23) சிங்கப்பூருக்கு சென்றடைந்தார்.

    இதனையடுத்து மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை சிங்கப்பூர் அமைச்சர்கள், முன்னணி நிறுவனமாக விளங்கும் டெமாசெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திலன் பிள்ளை சந்திரசேகராவுடனும், செம்கார்ப் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான கிம்யின் ஒங்'வுடனும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    ஆலோசனை 

    9 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் 

    இந்த ஆலோசனையின் போது, தமிழக தலைமை செயலர் இறையன்பு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் தமிழக முதல்வரோடு இருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

    சிங்கப்பூரில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் 350 முன்னணி தொழில் நிறுவனங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

    மேலும், மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்ளும் இந்த மாநாட்டின் மூலம் கிடைக்கவுள்ள முதலீடுகள் வரும் ஜனவரியில் தமிழகத்திற்கு வரும் என்னும் எதிர்பார்ப்பு தற்போது நிலவுகிறது.

    மு.க.ஸ்டாலின் மொத்தமாக 9 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சிங்கபூரினை தொடர்ந்து, ஜப்பான் நாட்டிற்கு செல்லவுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    ஜப்பான்
    சிங்கப்பூர்

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    மு.க ஸ்டாலின்

    காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்களுக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு  தமிழ்நாடு
    கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு - தமிழக முதல்வர் தனித்தீர்மானம்  மத்திய அரசு
    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  சென்னை

    ஜப்பான்

    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்
    கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு? உலகம்
    RRR புதிய சாதனை: ஜப்பான் திரையரங்குளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது திரையரங்குகள்

    சிங்கப்பூர்

    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்
    இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்  இந்தியா
    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   உலகம்
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025