Page Loader
மே 23ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
மே 23ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

மே 23ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 

எழுதியவர் Nivetha P
May 09, 2023
03:38 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பான் நாட்டினை சேர்ந்த MITSUBISHI ELECTRIC நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ரூ.1,891 கோடி முதலீட்டினை இந்நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. திருவள்ளூரில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக Air Conditioner and Compressor Factory அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, MITSUBISHI ELECTRIC நிறுவனத்தின் மிக முக்கியமான முதலீடு இது. 100% வெளிநாட்டு முதலீடாக இந்த முதலீடு அமைந்துள்ளது என்று தெரிவித்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், கடந்த ஆண்டில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் தான் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

தமிழ்நாட்டை அதிகம் விரும்பும் ஜப்பான் 

மேலும் பேசிய அவர், வரும் மே 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கவுள்ளேன். பெண்களை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்களையே வரவேற்கவுள்ளோம். ஜப்பான் நிறுவனங்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஜப்பானியர்கள் அதிகளவில் தமிழகத்தில் வாழ்ந்து வரும் பட்சத்தில், இந்த உறவினை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜப்பான் நாட்டு முன்னணி தொழில் நிறுவனங்களை சந்தித்து முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவுள்ளேன். அதற்கான மையில் கல்லாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.