தமிழக செயலாளர் இறையன்பு வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்
தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு கடந்த 1988ம்ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர். இவருக்கு தற்போது 60 வயதானதால் வரும் 30ம்தேதியோடு தனது பதவியில் இருந்து ஓய்வுப்பெறுகிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இவரையடுத்து, அடுத்த தமிழக செயலாளர் பதவியினை பெறுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரம் மற்றும் தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில் இறையன்பு அவர்கள் தான் ஓய்வுபெற்ற பின்னர் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த பதவி ஷகில் அக்தருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இறையன்பு தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே தலைமை செயலாளர் பதவிக்கு 3 பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை
அதன்படி, இந்த பட்டியலில் முதலிடத்தில் 1986ம்ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா பெயர் உள்ளது. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீடு செய்யும் கழகத்தின் தலைவராகவுள்ளார். 2ம் இடத்தில் 1989ம்ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த எஸ்.கே.பிரபாகர் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார் என்று கூறப்படுகிறது. 3ம் இடத்தில் 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சிவ்தாஸ் மீனா பெயர் உள்ளது. இவர் இப்பொழுது நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக உள்ளார் என்று தெரிகிறது. இவர்களுள் சிவ்தாஸ் மீனா தான் தமிழக தலைமை செயலாளராக நியமிக்க அதிகளவு வாய்ப்புள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(ஜூன்.,22) தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.