Page Loader
சனாதன விவகாரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி 
சனாதனம் குறித்த விவகாரம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சனாதன விவகாரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி 

எழுதியவர் Nivetha P
Sep 11, 2023
07:15 pm

செய்தி முன்னோட்டம்

சனாதனம் தொடர்பாக திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.கே.சேகர் பாபு ஆகியோருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் போராட்டம் நடத்தியதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலையிடம் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சனாதனத்தினை எதிர்ப்போம் என உதயநிதி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "நல்ல விஷயம் தான். அப்போது தான் பாஜக வளரும். உதயநிதி ஸ்டாலின் வந்த பிறகு பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது" என்றும், "சனாதனத்திற்கு எதிராகவோ ஆதரவாகவோ பேசாமல் வெறும் பேச்சாக இருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதனை பார்ப்பீர்கள்" என்றும் கூறினார்.

அண்ணாமலை 

இந்தியாவுக்கு புதிதாக எந்த பெயரையும் வைக்கவில்லை - அண்ணாமலை 

மேலும் அவர், 'உதயநிதி தலைக்கு விலை பேசிய சாமியார் நிஜத்தில் உண்மையான சாமியாராக இருக்க வாய்ப்பில்லை, அப்படிப்பட்டவர் நிச்சயம் சனாதனத்தினை பின்பற்றுபவராகவும் இருக்கமுடியாது' என்றும் கூறியுள்ளார். இந்தியா பெயர்மாற்ற விவகாரம் குறித்து பேசுகையில், இந்தியாவுக்கு புதிதாக எந்த பெயரையும் வைக்கவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாரத் என்னும் பெயர் தான் முன்னே கொண்டுவரப்பட்டுள்ளது. பாரத் என்னும் வார்த்தை நமது கலாச்சாரத்தை மிக ஆழமாக காட்டுகிறது. இந்த வார்த்தையினை பிரதமர் மோடி, ஜி20 மாநாடு-ஜி20 விருந்தில் பயன்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார். 'ஒரே நாடு ஒரே தேர்தல்'திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வுக்குழு ஆராயவுள்ளது என்று கூறிய அவர், இது பாஜகவின் கொள்கை முடிவாக இருந்தாலும் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர முடியாது என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.