Page Loader
திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு 
திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு

திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு 

எழுதியவர் Nivetha P
May 04, 2023
11:08 am

செய்தி முன்னோட்டம்

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார். இவர் காவல்நிலையத்திற்கு சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்துவருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வீர்சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட அதிகாரியாக ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் ஒருமாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையினை தாக்கல் செய்யவேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே பல்வீர் சிங் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 324, 326 மற்றும் 506-1 உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.

திருநெல்வேலி

விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது  

இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அண்மையில் வரும் 5ம் தேதி சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்வீர் சிங் தவிர மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி தனிப்பிரிவு காவலராக இருந்த போகன் மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் ஏஎஸ்பி-யாக இருந்த பல்வீர் சிங் மீது மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இப்பொது கூடுதலாக 2 காவலர்கள் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.