நான் ஓய்வு பெறுகிறேன்: தன்னுடைய மகனை நிறுவனங்களுக்கு வாரிசாக அறிவித்த லலித் மோடி
லலித் மோடி என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது. வரி ஏய்ப்பு, ஹவாலா, தொலைதொடர்பு ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பலவிதமான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட லலித் மோடி 2010 ஆம் ஆண்டில் லண்டனுக்கு தப்பிச் சென்றவர். சில மாதங்களுக்கு முன், முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுடன் டேட் செய்து, மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் லலித்மோடி மிகவும் பிரபலமானவர். முன்னாள் ஐபிஎல் சேர்மனாக இருந்தவர். கேகே மோடி குடும்ப தொண்டு நிறுவனத்தின் உறுப்பினரான லலித் மோடி, நிர்வாகப் பொறுப்பை தனது மகன் ருசிர் மோடியை நியமித்துள்ளார். இந்நிலையில், ஒரு கடிதத்தை டிவிட்டரில் வெளியிட்டு, தனது மகன் எல்லாவற்றையும் தலைமை தாங்குவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
லலித் மோடி வெளியிட்ட அறிக்கை
குடும்ப சொத்தில் சட்ட ரீதியான தகராறு மற்றும் உடல் நல பாதிப்பு
அம்மா மற்றும் சகோதரியுடன், லலித்மோடிக்கு பல ஆண்டுகளாக சொத்து தகராறு நீடித்து வருகிறது. அது மட்டுமின்றி, கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலத்தில், கோவிட் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டு, மெக்சிகோவில் இருந்து ஆக்சிஜன் சப்போர்ட்துக்காக, லண்டனுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. "என்னுடைய அம்மா மற்றும் சகோதரியுடன் இருந்து வரும் குடும்ப சொத்து சார்ந்த விவகாரம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. பல கட்ட கலந்துரையாடலுக்குப் பிறகும், இதற்கு எப்போது முடிவு ஏற்படும் என்பதை அறிய முடியவில்லை. இதனால் தொடர்ச்சியாக மன உளைச்சலுக்கு ஆளானேன்" என்று லலித் மோடி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். மகளுடன் கலந்து பேசி, பரஸ்பர சம்மதத்துடன் தனது பொறுப்பை மகனுக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.