தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 17, 18ம்.,தேதிகளில் அதி கனமழை பெய்தது.
இதனால் அந்த மாவட்டங்கள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளநீர் பாதிப்பு அதிகம் என்பதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானார்கள்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் அம்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிச.,21) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
மழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, 5வது நாளாக இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விடுமுறை
நெல்லை மாவட்ட பள்ளி விடுமுறை குறித்த தகவல்கள்
இதனை தொடர்ந்து, நெல்லையில் 1 முதல் 8ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9-12ம் வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும் திருநெல்வேலியில் மழை காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட 8 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டுமா?இல்லையா?என்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்றும் ஆட்சியர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மழையால் புத்தகங்கள் சேதம் அடைந்திருந்தால் அதுகுறித்த விவரங்களை தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, தூத்துக்குடி வெள்ளம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் நாளை(டிச.,22)முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்செந்தூர் ரயில் தடத்தில் அடுத்த ஒரு வாரத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பள்ளிகளுக்கு விடுமுறை
#BREAKING | தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 5வது நாளாக விடுமுறை அறிவிப்பு!#SunNews | #TuticorinRains pic.twitter.com/vKkuR0zrWK
— Sun News (@sunnewstamil) December 21, 2023