காதலர் தினத்தன்று ஒரு அழகான காதல் கதைக் கூறிய IFS அதிகாரி
காதலர் தினத்தையொட்டி, இந்திய வனத்துறை(IFS) அதிகாரி ஒருவர், ஒரு அழகான காதல் கதையை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஹார்ன்பில் பறவைகளைப் பற்றி போடப்பட்டிருக்கும் இந்த ட்வீட், தற்போது வைரல் செய்தியாகி இருக்கிறது. பதிவில் அவர் கூறி இருப்பதாவது: "இதை விட அழகான காதல் கதை வேறு இருக்கிறதா என்ன. பெண் ஹார்ன்பில் பறவை குழந்தைகளை அடைகாக்க கூட்டுக்குள் இருப்பதால், பெண் பறவைக்கு ஆண் பறவை உணவை ஊட்டுகிறது. இந்த வேலையை அந்த ஆண் பறவை இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்து செய்யும்." இந்த பறவைகள் வாழ்வில் ஒரே ஒரு துணையை தான் கொண்டிருக்கும் என்பதால், ஆண் பறவையும் பெண் பறவையும் இறக்கும் வரை சேர்ந்தே தான் இருக்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.