திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை
தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் 9 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த கொள்ளையை செய்திருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்த நிலையில் 2 தனிப்படைகள் ஹரியானாவிற்கு கிளம்பி சென்றது. இந்நிலையில் திருவண்ணாமலை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபரை பெங்களூரில் தனிப்படையினர் கண்டுபிடித்துள்ளார்கள் என்று அண்மையில் செய்திகள் வெளியாகியது.
ஹரியானாவை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஆரிப் கைது
இதனை தொடர்ந்து அந்த தங்கும் விடுதி உரிமையாளரை கைது செய்து திருவண்ணாமலை அழைத்து வந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. கொள்ளையடித்த பின்னர் திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்கு சென்று ஆந்திரா வழியாக கோலார் பகுதிக்கு தப்பிச்சென்ற கொள்ளையர்கள் காவல்துறையினர் தேடி வருவதை அறிந்து தங்கள் ஆப் செய்துவிட்டு அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஆரிப்(35) என்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நபரை போலீசார் தற்போது கைது செய்துள்ளதாகவும், மீதுமுள்ள கொள்ளையர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.