ஈரோடு: பறவைகளை பாதுகாக்க அமைதியாக தீபாவளியை கொண்டாடிய 7 கிராமங்கள்
செய்தி முன்னோட்டம்
ஈரோட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடமுகம் வெள்ளோடு அருகே பறவைகள் சரணாலயம் ஒன்று உள்ளது.
ஆயிரக்கணக்கான உள்ளூர் பறவை இனங்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்த பறவைகள், அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க, இந்த சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.
அருகிலுள்ள சரணாலயத்தில் பறவைகளை பாதுகாக்க, இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள், கடந்த 22 ஆண்டுகளாக, அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
நாடு முழுவதும் பட்டாசு வெடித்து தீபாவளியை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், இந்த சரணாலயத்தை சுற்றி உள்ள ஏழு கிராமங்கள், சத்தம் ஏதுமின்றி, விளக்குகளை மட்டும் ஏற்றி விழாவை கொண்டாடுகின்றனர்.
card 2
புதுத்துணி, மத்தாப்புகள் மட்டுமே கொண்ட தீபாவளி
இனப்பெருக்கத்திற்காக இந்த சரணாலயத்திற்கு வரும் பறவைகளை பயமுறுத்தாமல் இருக்க, இந்த கிராமங்களில் வசிக்கும் 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பட்டாசுகளை வெடிப்பதில்லை என முடிவு செய்து, அதை கடைப்பிடித்தும் வருகின்றனராம்.
தீபாவளிக்கு தங்கள் குழந்தைகளுக்கு புதிய ஆடைகளை வாங்கி தந்து, பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், மத்தாப்புகளை மட்டுமே எரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
ஊரெங்கும் வெடி சத்தமும், வெட்டு சத்தமும் கேட்டுக்கொண்டிருக்க, செல்லப்பம்பாளையம், வடமுகம் வெள்ளோடு, செம்மாண்டம்பாளையம், கருக்கன்காட்டு வலசு, புங்கம்பாடி ஆகிய கிராமங்கள், இந்த ஆண்டு அமைதியான தீபாவளியை கொண்டாடியுள்ளன.