உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதன் உயர்ந்த கதை
செய்தி முன்னோட்டம்
புதுடில்லி உச்ச நீதிமன்றம் கே.வி.விஸ்வநாதன்(57) அவர்களை நீதிபதியாக தேர்வு செய்துள்ளது.
அதன்படி அவர் இன்று(மே.,19) பதவியேற்று கொண்டார்.
பொள்ளாச்சி மாவட்டத்தினை சேர்ந்த அவர், வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் என்பது கவனிக்கத்தக்கது.
இவருடைய தந்தை கே.வி.வெங்கடராமன் கோவை அரசு வழக்கறிஞராக இருந்தவர், 1991-96ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசின் வழக்கறிஞராக கிரிமினல் வழக்குகளை கையாண்டுள்ளார்.
இந்நிலையில் எப்படியாவது உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றவேண்டும் என்னும் எண்ணத்துடன் 1988ல் டெல்லி சென்றார் கே.வி.விஸ்வநாதன்.
அங்கு அவர் தமிழர்கள் அதிகம் தங்கும் ஆர்.கே.புரத்தில் வாடகை ரூமில் தங்கியுள்ளார்.
காலை-மதிய உணவுகளை கோர்ட்டிலும், இரவு உணவினை அவர் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள மெஸ்'ஸிலும் சாப்பிட்டுள்ளார்.
1990ல் முதன்முதலாக சரத்குமாருக்கு எதிரான வழக்கில், விகடன் பத்திரிக்கைக்கு ஆதரவாக ஆஜரானார் விஸ்வநாதன்.
நீதிபதி
பல வழக்குகளை வாதாடி வெற்றி பெற்றவர் கே.வி.விஸ்வநாதன்
இவரது வாதத்தினை கேட்ட பிரெஸ் கவுன்சில் விகடனுக்கு எதிரான வழக்கினை தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் தங்கள் தகுதிக்கு குறைந்த பிரெஸ் கவுன்சில் போன்ற இடங்களில் வாதாட ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால் இவர் ஒப்புக்கொண்டு வாதாடி வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அதிமுக தரப்பிற்காக விசாரணை கமிஷன் முன் ஆஜரானார்.
உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகளை வாதாடி வெற்றி பெற்றவர்.
சீனியர் வழக்கறிஞர்களை நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் வழக்கம் சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
அதன்படியே விஸ்வநாதன் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை 2 தமிழர்கள் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த நிலையில் 3வது நீதிபதியாக பொள்ளாச்சி கே.வி.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.