
இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின்
செய்தி முன்னோட்டம்
தி காஷ்மீர் டைம்ஸின் நிர்வாக ஆசிரியரான அனுராதா பாசின், தி நியூயார்க் டைம்ஸில் தனது கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதில் அவர், இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
அக்டோபர் 19, 2020 அன்று மாலை, ஸ்ரீநகரில் இருந்த தி காஷ்மீர் டைம்ஸ் நிறுவனம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் மூடப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை கேள்வி கேட்கும் துணிச்சலுக்கான தண்டனையாக தான் அந்த ரைட்டை பார்ப்பதாக அனுராதா கூறி இருக்கிறார்.
"நான் நிர்வாக ஆசிரியராக இருக்கும் செய்தித்தாள், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 1954இல் எனது தந்தையால் நிறுவப்பட்டது." என்று அனுராதா கூறியுள்ளார்.
இந்தியா
அனுராதா பாசின் கட்டுரையில் கூறி இருப்பதாவது:
பல தசாப்தங்களாக பல போர் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்கொண்ட போதும் சுதந்திரமான குரலாக எங்கள் பத்திரிகை இருந்து வருகிறது.
ஆனால், பல தசாப்தங்களாக எவ்வளவோ பிரச்சனைகளை தாண்டி வந்த எங்கள் பத்திரிகையால் மோடியின் ஆட்சியை எதிர்கொள்ள முடியவில்லை.
இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் மோடியின் இந்து-பேரினவாத இயக்கம், தங்களுக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று இரும்பு கரம் கொண்டு பத்திரிகைகளை அடக்கி வருகிறது.
ஜனவரியில், டிஜிட்டல் மீடியா வழிகாட்டுதல்களுக்கான வரைவு திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது அரசாங்கத்திற்கு பிடிக்காத எந்த உள்ளடக்கத்தையும் தடுக்க அனுமதிக்கும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீக்கிரமே இந்தியாவின் மற்ற பகுதிகளும் காஷ்மீரைப் போல மாறலாம். என்று கூறியுள்ளார்.