Loading...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அளித்த முக்கிய விளக்கம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளிவைப்பு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அளித்த முக்கிய விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2026
01:24 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15 அன்று மதுரை உசிலம்பட்டியில் தொடங்கப்படவிருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக திட்டமிட்டபடி தொடங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ தொடக்கத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள மோதிரங்கள் அனைத்தும் 100 சதவீதம் உயர்தரமானவை என்றும், அவை அனைத்தும் 916 ஹால்மார்க் முத்திரை கொண்டவை என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். தங்கத்தின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

விவரங்கள்

டெங்கு தடுப்புப் பணிகள் மற்றும் கட்டுப்பாடுகள்

பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரப் பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று கொசு மருந்து தெளிக்கவும், நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு மதியம் 1:00 - 2:00 மற்றும் மாலை 4:00 - 6:00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், நெகிழிப் பைகளில் உணவு கொண்டுவரத் தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT