மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் மகளிர் இலவச பேருந்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தாலுகா வாடியூர் பஞ்சாயத்தில் மே 1-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மகளிர் இலவச பேருந்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பேருந்து சேவை கிராமத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து தென்காசியில் 73 டாஸ்மாக் கடைகள் தான் உள்ளது எனவும், வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.