NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சந்திரயான்-3 திட்டத்தில் பங்காற்றி, தற்போது பகுதி நேரமாக இட்லி விற்கும் ஊழியர், ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரயான்-3 திட்டத்தில் பங்காற்றி, தற்போது பகுதி நேரமாக இட்லி விற்கும் ஊழியர், ஏன்?
    சந்திரயான்-3 திட்டத்தில் பங்காற்றி, தற்போது பகுதி நேரமாக இட்லி விற்கும் ஊழியர்

    சந்திரயான்-3 திட்டத்தில் பங்காற்றி, தற்போது பகுதி நேரமாக இட்லி விற்கும் ஊழியர், ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 19, 2023
    04:39 pm

    செய்தி முன்னோட்டம்

    சந்திரயான் 3 திட்டத்தின் உருவாக்கத்தில் சிறிய பங்காற்றிய, HEC நிறுவனத்தைச் சேர்ந்த தீபக் குமார் உப்ராறியா, ராஞ்சியில் வருமானத்திற்காக இட்லி விற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியதன் மூலம், இந்தியாவின் வரலாற்றுச் சாதனை மிக்க நிகழ்வைப் பதிவு செய்தது இஸ்ரோ.

    இந்த சந்திரயான் 3-ல் பயன்படுத்தப்பட்ட, மடங்கும் மேடை மற்றும் சரியும் கதவுகளை உருவாக்கி, அதில் ஒரு சிறுபங்கு வகித்தது HEC நிறுவனம். HEC (Heavy Engineering Corporation Limited) என்பது இந்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு 18 மாதங்களாகச் சம்பளத்தை அளிக்காமல் நிலுவையில் வைத்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    சந்திரயான் 3

    சம்பள பாக்கி வைத்திருக்கும் HEC: 

    எனவே தான், தன்னுடைய தினசரி பணத்தேவைக்காக, HEC நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, காலை மற்றும் மாலை வேளைகளில் இட்லி விற்று வருவதாகத் தெரிவித்திருக்கிறார் தீபக் குமார் உப்ராறியா.

    இவருடன் சேர்த்து, 2,800 ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக அந்நிறுவனம் சம்பளத்தைக் கொடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

    2012ம் ஆண்டு ரூ.8,000 சம்பளத்திற்காக தனியார் வேலையை உதறிவிட்டு HEC-யில் பணியில் இணைந்திருக்கிறார் உப்ராறியா.

    முதலில் கடன் வாங்கி வீட்டுச் தேவைகளைக் கவனித்து வந்திருக்கிறார். தற்போது யாரும் கடன் கொடுக்க முன்வராமல் இருக்கவே, பகுதி நேரமாக இட்லி விற்கத் தொடங்கியதாகத் தெரிவித்திருக்கிறார் உப்ராறியா.

    அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிற ஊழியர்களும் தங்களுடைய தினசரி தேவைகளைப் பூர்த்தி, இது போன்ற சிறிய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனராம்.

    embed

    பகுதி நேரமாக இட்லி விற்று வரும் உப்ராறியா:

    Meet Deepak Kumar Uprariya who sells Tea & Idli in Ranchi. He is a Technician, who worked for building ISRO's Chandrayaan-3 launchpad. For the last 18 months, he has not received any salary. "When I thought I would die of hunger, I opened an Idli shop" (BBC Reports) pic.twitter.com/cHqytJvtfj— Cow Momma (@Cow__Momma) September 17, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3
    இஸ்ரோ
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சந்திரயான் 3

    இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கு ஆன செலவு எவ்வளவு? சந்திரயான்
    சந்திரயான்-3 பின்னால் இருக்கும் இஸ்ரோ குழுவை பற்றி ஒரு பார்வை சந்திரயான்
    உங்களுக்கு தெரியுமா? நிலவில் 50 ஆண்டுகளாக கிடக்கும் மனித கழிவுகள்   விண்வெளி
    புதிய முதலீடுகளை ஈர்க்குமா சந்திரயான் 3யின் வெற்றி? இஸ்ரோ

    இஸ்ரோ

    சந்திரயான் 3: நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டது பிரஞ்யான் ரோவர் சந்திரயான் 3
    'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி': சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு வைரலாகும் மீம்கள்  சந்திரயான் 3
    சந்திரயான் 3 வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய எம்எஸ் தோனி மகள்; வைரலாகும் காணொளி சந்திரயான்
    சந்திரயான் 3: வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் உணர்ச்சிவசப்படும் காணொளி இணையத்தில் வைரல் சந்திரயான் 3

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது மத்திய அரசு  நாடாளுமன்றம்
    இந்திய மக்களை ஒன்றிணைக்கும் இந்தி மொழி: உள்துறை அமைச்சர் அமித்ஷா அமித்ஷா
    சனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்; பிரதமர் மோடி நேரடி அட்டாக் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025