LOADING...
டிசிஎஸ் நாசிக் மதமாற்ற வழக்கு: சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு
டிசிஎஸ் நாசிக் வழக்கு இந்திய அளவில் பெரும் சட்ட விவாதத்தை தூண்டியுள்ளது

டிசிஎஸ் நாசிக் மதமாற்ற வழக்கு: சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 16, 2026
06:09 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் அரங்கேறிய கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பான வழக்கு, இந்திய அளவில் பெரும் சட்ட விவாதத்தை தூண்டியுள்ளது. இந்த விவகாரத்தை ஒரு சாதாரண குற்றமாக பார்க்காமல், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான "தீவிரவாதச் செயலாக"க் கருதி அதற்கேற்ற சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோரிக்கை

உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்

மத சுதந்திரம் என்பது ஒரு அடிப்படை உரிமை என்றாலும், அது பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு உட்பட்டது என்பதை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கட்டாய மதமாற்றங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைப்பதால், இவற்றைத் தீவிரவாத தடுப்புச் சட்டங்களின் கீழ் கையாள வேண்டும் எனவும், மதமாற்றம் தொடர்பான வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக விசாரித்து, விரைவான தீர்ப்பு வழங்க நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய வழக்குகளில் புலனாய்வு மற்றும் விசாரணையை துரிதப்படுத்த காலக்கெடு விதிக்கப்பட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சர்ச்சை

ஏன் டிசிஎஸ் நாசிக் கிளை கடும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது?

நாசிக்கில் உள்ள TCS BPOவில் 2022-ஆம் ஆண்டு முதல் திட்டமிடப்பட்ட முறையில் அத்துமீறல்கள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுவரை 9 பெண் ஊழியர்கள் தைரியமாக முன்வந்து புகார்களை அளித்துள்ளனர். அவற்றில் முறையற்ற தொடுதல், பின்தொடர்தல் (Stalking), ஆபாசப் பேச்சுக்கள் மற்றும் பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை ஒரு தொடர்ச்சியான நடைமுறையாகவே அங்கு இருந்துள்ளதாக கூறியுள்ளனர். பாலியல் தொல்லைகளுடன் சேர்த்து, இந்து தெய்வங்களை அவதூறாக பேசுவது, நமாஸ் செய்யக் கட்டாயப்படுத்துவது மற்றும் விருப்பத்திற்கு மாறாக அசைவ உணவுகளை உண்ண வற்புறுத்துவது போன்ற செயல்களும் ஒரே நேரத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகள் இந்த கொடுமைகளை தடுக்காமல், மறைமுகமாக ஊக்கப்படுத்தியதாகவும் எப்.ஐ.ஆர் (FIR) நகல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

விசாரணை

காவல்துறையின் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

நாசிக் போலீஸ் கமிஷனர் சந்தீப் கர்னிக் இது குறித்துக் கூறுகையில், "விசாரணையில் ஒரு முக்கியமான விஷயம் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 7 ஆண்களும் அலுவலகத்திற்குள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவாக செயல்பட்டுப் பெண் ஊழியர்களை தனித்தனியாக குறிவைத்துத் தாக்கியுள்ளனர். பெரும்பாலான வழக்குகளில் இவர்களே கூட்டாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்," என்றார். இதுவரை ஒரு ஆண் ஊழியர் உட்பட மொத்தம் 9 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 8 பேரில் 7 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். ஆனால், இந்த விவகாரத்தில் முக்கியத் தொடர்புடையதாகக் கருதப்படும் மனிதவள மேம்பாட்டு அதிகாரி நிதா கான் இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.

Advertisement