இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைந்துள்ள காசா பகுதி, பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் ஆயுத குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த அமைப்பினருக்கும் இஸ்ரேல் நாட்டின் ராணுவத்திற்கும் அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி கடந்த 7ம் தேதி இஸ்ரேலை நோக்கி காசாவில் இருந்து கிட்டத்தட்ட 7 ஆயிரம் ஏவுகணைகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டு, போர் சூழல் ஏற்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் அறிவித்தது.
இதனையடுத்து, இஸ்ரேல்-காசா இடையே சரமாரியான தாக்குதல்கள் நடந்து வருகிறது.
இதன் காரணமாக இஸ்ரேல் பிரதமர், 'இதுவரை ஹமாஸ் எதிர்கொள்ளாத தாக்குதல்களை சந்திக்க நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அவசர எண்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் நாடுகளுக்கு மத்தியில் அசாதாரண சூழல் நிலவுகிறது
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும், தனியே வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதனை தொடர்ந்து இஸ்ரேல்-பாலஸ்தீனம் நாடுகளுக்கு மத்தியில் அசாதாரண சூழல் நிலவும் காரணத்தினால் தமிழர்கள் உதவிக்கு அழைக்க அவசரக்கால உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளில் வாழும் தமிழர்கள் +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 என்னும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
மேலும், nrtchennai@gmail.com, nrtchennai@tn.gov.in என்னும் மின்னஞ்சல் முகவரிகள் மூலமும் உதவிக்கு அழைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.