தமிழகத்தின் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தின் 11ம்வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன்னர் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அவர்களால் வெளியிடப்பட்டது.
அதன்படி, 11ம்வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இதில் மாணவிகள் 94.36%தேர்ச்சி பெற்றுள்ளார்கள், மாணவர்கள் 88.99%தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
இம்முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சிப்பெற்றுள்ளார்கள்.
கடந்தாண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், இந்தாண்டு 0.86 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
தேர்ச்சி விகிதத்தில் 96.38% பெற்று திருப்பூர் முதலிடத்தில் உள்ளது.
மேலும் ஈரோடு 96.18%,கோவை 95.73%,நாமக்கல் 95.60%,தூத்துக்குடி 95.43%விகிதங்கள் பெற்று அடுத்தடுத்த இடத்தினை பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்த 11ம்வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9பேர் 100க்கு100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!#SunNews | #11thResults | #ExamResults pic.twitter.com/WuiDd9ZvrW
— Sun News (@sunnewstamil) May 19, 2023