மார்ச் 16 வரை விடாது பெய்யும் மழை! தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மார்ச் 16 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மார்ச் 11: தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மார்ச் 12 முதல் 15 வரை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். மார்ச் 16: நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
எச்சரிக்கை
வெப்பநிலை உயர்வு எச்சரிக்கை
மழை ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கப்போகிறது. மார்ச் 12 - 14: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். இது இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும். ஏனைய வட தமிழக மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.