தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி
தமிழகத்தில் ஏற்கனவே 284 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், தற்போது புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், யாருக்கும் தீவிர சிகிச்சை அல்லது ஆக்சிஜன் உதவி தேவைப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சென்னை மற்றும் கோவையில் மட்டுமே 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பேருக்கும், குவைத் நாட்டில் இருந்து வந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவின் சராசரி தொற்று விகிதத்தை விட தமிழகத்தில் அதிகமாக உள்ளது
அதே போல் சேலம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளை சேர்ந்த 4 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 73 பேரும், சென்னையில் 63 பேரும் தற்போது கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறுகையில், வைரல் தொற்றால் பெருமளவில் பாதிப்பு ஏற்படாது. எனினும் பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பாக இருந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதம் 1.99 சதவிகிதமாக உள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதனடிப்படையில் இந்தியாவின் சராசரி தொற்று விகிதமான 0.16-ஐ விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.