தமிழகத்தில் அடுத்த சுற்று கனமழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட முக்கியத் தகவல்
செய்தி முன்னோட்டம்
கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி இரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழைக்கு பிறகு, தற்போது மழையின் தீவிரம் சற்றுக் குறைந்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களை மக்கள் தடையின்றிக் கொண்டாட ஏதுவாக மழைக்கு இடைவெளி ஏற்பட்டுள்ள சூழலில், அடுத்த சுற்று மழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
மழை எச்சரிக்கை
அக்டோபர் 20 முதல் மீண்டும் தொடங்கும் மழை: வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 20-ஆம் தேதி இரவு முதல் அக்டோபர் 22 வரையிலான நாட்களில் தமிழகத்தில் மீண்டும் மழை வேட்டை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மழை மேகங்கள் பெரும்பான்மையாகக் கடலிலேயே தங்கிவிடுவதால், நிலப்பரப்பிற்குள் நுழைய முடியாமல் பலவீனமடைந்து விடுகின்றன. தற்போது நிலவும் மேலடுக்கு சுழற்சியானது அரபிக்கடலை நோக்கி நகர்ந்த பிறகு, தமிழகத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கும்".
"சென்னை (KTCC) பகுதியில் வெயில் அடித்தாலும் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள் (நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கடலூர்) மற்றும் மேற்குத் தமிழகத்தில் (கோவை, நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல்) இடியுடன் கூடிய தீவிர மழை பெய்யக்கூடும்".
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Today Weather inference from PJ - UAC is still near North TN off Chennai coast but looks very weak.
— Tamil Nadu Weatherman (@praddy06) October 19, 2026
=====================
The storms are struggling to break into land and weakened off coast. The UAC will move into Arabian sea after two days being part of elongated trough… pic.twitter.com/1oBiKnV8TN