TNHB அபராத வட்டி முழு தள்ளுபடி: வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தவணைத் திட்டத்தில், 31.03.2026க்குள் தவணை முடிந்தும் நிலுவை வைத்துள்ள சுமார் 7,000 ஒதுக்கீட்டுதாரர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக வீட்டு வசதி துறை அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவித்துள்ளார். இதன்படி, நிலுவைத் தொகையை ஒரே தவணையாக செலுத்தினால், அபராத வட்டி உள்ளிட்ட குறிப்பிட்ட வட்டிகள் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுக்குரிய விற்பனைப் பத்திரம் வழங்கப்படும். ஓராண்டு காலம் நடைமுறையில் இருக்கும் இந்த சிறப்புத் திட்டத்தின் மூலம், பல ஆண்டுகளாக கூடுதல் அபராத வட்டி நிலுவை காரணமாகப் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவித்து வந்த வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்கள் அனைவரும் பெரும் பயனடைவார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
அபராத வட்டி முழு தள்ளுபடி: வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!#TNHB #HousingMinister #PRajkumar #PenaltyWaiver #TamilNaduGovernment #UrbanHousing #TamilNaduPolitics #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல் pic.twitter.com/soHWrAd7n7
— Thanthi TV (@ThanthiTV) August 28, 2026