சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் விமலா; தமிழக முதல்வர் வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு பேராசிரியர் பி.விமலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்,, விமலாவின் இலக்கிய பங்களிப்புகளைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின், மொழிபெயர்ப்பில் அவரது தொடர்ச்சியான பணிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விமலா, எனது ஆணகள் என்ற தலைப்பில் நளினி ஜமீலா எழுதிய என்டே ஆண்கள் என்ற மலையாள புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பிற்காக இந்த மதிப்புமிக்க விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு
'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான #SahityaAkademi மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் திருமிகு ப. விமலா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
— M.K.Stalin (@mkstalin) March 9, 2025
கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன். pic.twitter.com/4fIlIkzzbW
சாகித்ய அகாடமி
மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி
சாகித்ய அகாடமி 1955 முதல் இந்திய மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்புகளை அங்கீகரித்து வருகிறது. இது நாட்டின் மிகவும் மதிப்புமிக்க இலக்கிய விருதுகளில் ஒன்றாகும்.
விருது பெற்றவர்களுக்கு ₹1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, பல்வேறு மொழிகளில் இருந்து 21 புத்தகங்கள் விருதுக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விமலா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்தார்.
அங்கு அவர் தனது கல்வி திட்டத்தில் கூடுதலாக ஒரு மொழி படிக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக மலையாளத்தை கூடுதல் மொழியாக தேர்வு செய்து படித்தார்.
இது தற்போது இந்தியாவின் இலக்கிய துறையில் மதிப்புமிக்க விருதை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.