LOADING...
புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை அறிவிப்பு  
ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகையை ரொக்கமாக விநியோகிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை அறிவிப்பு  

எழுதியவர் Sindhuja SM
Dec 09, 2023
04:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வார தொடக்கத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கிய மிக்ஜாம் புயலால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகையை ரொக்கமாக விநியோகிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகை ரூ.4 இலட்சத்திலிருந்து, ரூ.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சேதமடைந்த குடிசைகளுக்கான நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

டக்ஜ்வ்

விவசாய நிலங்களுக்கான நிவாரணத் தொகை உயர்வு

விவசாய நிலங்களுக்கான நிவாரணத் தொகை கீழுள்ளவாறு உயரழுத்தப்பட்டுள்ளது. நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கான நிவாரணத் தொகை ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500இல் இருந்து ரூ. 17 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமடைந்திருந்தால், அவைகளுக்கு வழங்கப்பட இருந்த நிவாரணத் தொகை ஒரு ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ. 22,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கான நிவாரணத் தொகை ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,410 இல் இருந்து ரூ. 8,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கூறிய விவசாய பயிர் பாதிப்புகள் அனைத்தும் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.