Loading...
அக். 6-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு! மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்குத் தேர்தல் தேதி அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்குத் தேர்தல் தேதி அறிவிப்பு

அக். 6-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு! மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்குத் தேர்தல் தேதி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 07, 2026
06:28 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்யபாமா (தாராபுரம்) உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததால் இத்தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. கூடுதல் விபரங்கள் இங்கே:-

முக்கிய தேதிகள்

தேர்தல் கால அட்டவணை மற்றும் முக்கிய தேதிகள்

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது.

தேர்தல் தொடர்பான முழுமையான கால அட்டவணை இதோ:

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: செப்டம்பர் 9

வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: செப்டம்பர் 16

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை: செப்டம்பர் 17

வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்: செப்டம்பர் 19

வாக்குப்பதிவு நடைபெறும் நாள்: அக்டோபர் 6

வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள்: அக்டோபர் 9

தேர்தல் ஆணையம்

காலியாக உள்ள 7 தொகுதிகளும் தேர்தல் ஆணையத்தின் முடிவும்

தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), எம்.எல்.ஏக்கள் ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

மேலும், முதலமைச்சர் விஜய் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்து பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டார்.

இதனால் மொத்தம் 7 தொகுதிகள் காலியான போதிலும், மற்ற 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பரபரப்பு

அரசியல் களத்தில் அதிகரிக்கும் பரபரப்பு

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து செப்டம்பர் 9 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குவதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் புதிதாகக் களம் கண்டுள்ள தவெக இடையே இந்த இடைத்தேர்தல் கடுமையான மும்முனைப் போட்டியை ஏற்படுத்தும் என்பதால் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT