LOADING...
தமிழக அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு: 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) அறிமுகம்! முழு விவரம்
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

தமிழக அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு: 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) அறிமுகம்! முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 03, 2026
01:20 pm

செய்தி முன்னோட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) இன்று (ஜனவரி 3) அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

விவரங்கள்

முக்கிய அம்சங்கள்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவது இந்தத் திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. பழைய திட்டத்திற்கு இணையானது: பழைய ஓய்வூதியத் திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த பணப்பயன்கள் மற்றும் சலுகைகள் அனைத்தும் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். நிதி ஒதுக்கீடு: இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு கூடுதலாக 13,000 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதியத்திற்கு வழங்க உள்ளது. மேலும், ஆண்டுதோறும் அரசின் பங்களிப்பாக 11,000 கோடி ரூபாய் செலவிடப்படும்.

அறிவிப்புகள்

இதரப் பயன்கள் மற்றும் அறிவிப்புகள்

முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு கூடுதல் சலுகைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன: சிறப்பு கருணை ஓய்வூதியம்: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து, இந்தப் புதிய திட்டம் (TAPS) அமலுக்கு வருவதற்கு முன் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்குச் சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். பணிக்கொடை உயர்வு: ஓய்வூதியப் பணிக்கொடை (Gratuity) வரம்பு 20 இலட்சத்திலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

நிதிச்சுமை 

நிதிச்சுமைக்கு மத்தியில் அரசின் அறிவிப்பு

மருத்துவக் காப்பீடு: ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவித் தொகை 10 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுப்பு ஒப்படைப்பு (Surrender Leaves): அரசு ஊழியர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நிதிச்சுமைகள் அதிகமாக இருப்பினும், அரசு ஊழியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை ஏற்று, அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் தொலைநோக்குத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement