தேர்தல் 2026: 11 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளன
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் ஐந்தாண்டு கால தலையெழுத்தை நிர்ணயிக்கும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதிகாலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், EPS, விஜய், உள்ளிட்ட கட்சி தலைவர்கள், ரஜினி, அஜித் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் ஓட்டை பதிவு செய்தனர். தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் இன்று முதற்கட்டமாக 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மாலை 6 மணி வரை தடையின்றி வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், பொதுமக்கள் விரைந்து வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
நான்கு முனைப் போட்டி
நான்கு முனைப் போட்டியும் வேட்பாளர் விவரங்களும்
இந்த முறை தமிழகத் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. ஆளும் திமுக கூட்டணி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி ஆகியவற்றுடன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜனநாயகம் தழைக்க சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் இன்று தங்கள் தீர்ப்பை வழங்க உள்ளனர். 11 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த நேரப்படி, 26.29% வாக்குகளே பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புள்ளிவிவரங்கள்
வாக்காளர் புள்ளிவிவரங்கள் மற்றும் பாலின விகிதம்
தேர்தல் ஆணையத்தின் இறுதிப் பட்டியலின்படி, தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் வாக்காளர்களை விட அதிகமாக உள்ளது. மொத்தம் உள்ள 5.73 கோடி வாக்காளர்களில், பெண்கள் 2.93 கோடி பேரும், ஆண்கள் 2.80 கோடி பேரும் உள்ளனர். மேலும், 7,728 மாற்றுப் பாலினத்தவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இளம் வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதால், அவர்களின் வாக்குகள் வெற்றித் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவணங்கள்
வாக்களிக்க தேவையான மாற்று அடையாள ஆவணங்கள்
வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) இல்லாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், பின்வரும் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்: தேசிய அடையாள அட்டை (மத்திய அரசு வழங்கியது) பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் பான் கார்டு (PAN Card) ரேஷன் அட்டை மற்றும் வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகம் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை MNREGA அடையாள அட்டை மற்றும் மருத்துவக் காப்பீடு அட்டை ஓய்வூதிய அட்டை மற்றும் அரசுப் பணி அடையாள அட்டைகள்
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | Tamil Nadu Elections 2026 | Along with his family, Deputy CM Udhayanidhi Stalin, Tamil Nadu CM and DMK candidate from Kolathur, MK Stalin, arrives at a polling station in Chennai to cast his vote. pic.twitter.com/eBWtnRYuvQ
— ANI (@ANI) April 23, 2026