தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் - தீர்மானம் நிறைவேற்றம்
தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் அரசு துறைகளில் வெளி மாநிலத்தவர்களே அதிகம் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று தொடர்ந்து புகார்கள் எழுந்தன. தமிழ்நாட்டில் பணிகள் அனைத்தும் தமிழகர்களுக்கே கொடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து, 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதன் பேரில், தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்று பணியில் இருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அரசு பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம் என்கிற சட்டம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் தெரிந்த இளைஞர்களை 100 சதவீதம் பணியில் சேர்ப்பதை உறுதி செய்ய ஆள் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆட்சேர்ப்புகாக நடத்தப்படும் போட்டி தேர்வுகள் அனைத்திலும் தமிழ் மொழி கட்டாயம் என 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன் பேரில், அரசு பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம் என்கிற சட்டம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.