Loading...
வீ தி லீடர்ஸ் அமைப்பின் ஊடகப் பொதுச்செயலாளராக அஸ்பயர் கே.சுவாமிநாதன் நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு
வீ தி லீடர்ஸ் அமைப்பின் ஊடகப் பொதுச்செயலாளராக அஸ்பயர் கே.சுவாமிநாதன் நியமனம்

வீ தி லீடர்ஸ் அமைப்பின் ஊடகப் பொதுச்செயலாளராக அஸ்பயர் கே.சுவாமிநாதன் நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 21, 2026
03:10 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தலைமையிலான வீ தி லீடர்ஸ் (We The Leaders) அமைப்பின் ஊடகம், பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவுக்கான பொதுச்செயலாளராக கே.சுவாமிநாதன் (அஸ்பயர் சுவாமிநாதன்) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைப்பின் தலைவரான கே.அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அமைப்பின் மக்கள் தொடர்பு பணிகளையும் ஊடக செயல்பாடுகளையும் மாநில அளவில் மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை

சுவாமிநாதனின் நியமனம் குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் தொடர்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், கே.சுவாமிநாதனை பொதுச்செயலாளர் (ஊடகம், பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு) என்ற பொறுப்பில் நியமிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சுவாமிநாதனுக்கு அமைப்பின் அனைத்துத் தலைவர்களும் களப்பணியாளர்களும் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

கரு நாகராஜன்

முன்னதாக அமைப்புப் பொதுச்செயலாளராகக் கரு.நாகராஜன் நியமனம்

சமீபத்தில் தான் வீ தி லீடர்ஸ் இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக கரு.நாகராஜனை அண்ணாமலை நியமித்திருந்தார்.

மாநிலம் முழுவதும் அமைப்பின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், அடிமட்ட களப்பணியாளர்களை ஒருங்கிணைக்கவும் கரு.நாகராஜனுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஊடக ரீதியான பிரச்சாரங்களை முடுக்கிவிட சுவாமிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அடுத்தடுத்த நியமனங்கள் அண்ணாமலையின் மக்கள் இயக்கத்திற்கு புதிய வேகத்தை அளித்துள்ளன.

ADVERTISEMENT

செயல்பாடுகள் தீவிரம்

மாநில அளவில் தீவிரமடையும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் செயல்பாடுகள்

வீ தி லீடர்ஸ் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து தமிழகம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்களையும், போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாநாடுகளையும் நடத்தி வருகிறது.

தற்போது ஊடகம் மற்றும் பிரச்சாரப் பிரிவுக்கு புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், அமைப்பின் கொள்கைகளையும் சமூக நோக்கங்களையும் பொதுமக்களிடம் இன்னும் திறம்படக் கொண்டு சேர்க்க முடியும் என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்புதிய நியமனத்திற்கு அமைப்பின் உறுப்பினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT