Page Loader
மேல்மருவத்தூரில் திருமாவளவன், எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் திடீர் சந்திப்பு 
மேல்மருவத்தூரில் திருமாவளவன், எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் திடீர் சந்திப்பு

மேல்மருவத்தூரில் திருமாவளவன், எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் திடீர் சந்திப்பு 

எழுதியவர் Nivetha P
Oct 23, 2023
04:31 pm

செய்தி முன்னோட்டம்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மரணம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று(அக்.,23) மேல்மருவத்தூர் சென்றார். அங்கு அவர் பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் அவரது மகன்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு திரும்பியுள்ளார். அப்போது பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் கேசவ விநாயகம், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் பங்காரு அடிகளார் குடும்பத்தினரை சந்திக்க ஒரே நேரத்தில் அங்கு வருகை தந்ததாக தெரிகிறது. அதன்படி, தொல்.திருமாவளவன் இவர்களை திடீரென சந்திக்க நேர்ந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொண்டு நலம் விசாரித்து கொண்டனர்.

இரங்கல் 

பிரதமர் மோடியின் இரங்கல் குறிப்பு 

இந்நிலையில் அண்மையில் அண்ணாமலை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து தொல். திருமாவளவன் நலம் விசாரித்தார். மேலும் அண்ணாமலை உடன் வந்திருந்த கேசவ விநாயகத்தையும் திருமாவளவன் நலம் விசாரித்தார். இவர்கள் எதிரெதிர் கட்சிகளை சேர்ந்தோர் என்றாலும் பொது இடத்தில் இவர்கள் இவ்வாறு கைகுலுக்கி நலம் விசாரித்து பேசி கொள்வது தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் ரீதியான போட்டிகள் நிலவுவதாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி பங்காரு அடிகளார் குடும்பத்தினருக்கான ஓர் இரங்கல் குறிப்பினை அண்ணாமலை மற்றும் கேசவ விநாயகத்திடம் கொடுத்து அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

வைரல் வீடியோ