சென்னையில் மீண்டும் ட்ராம் ரயில்களுக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு
சென்னை மெட்ரோ ரயில் மற்றும் சென்னை பறக்கும் ரயில் வழித்தடங்களுடன் ஒருங்கிணைக்கும் மெட்ரோலைட் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பது குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுக்கான நிதியை திரட்டுவதற்கான ஒப்பந்த ஏலத்தை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் நேற்று(பிப்.,6) முன்வைத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் 40-50 சதவிகித செலவு மெட்ரோலைட் திட்டத்திற்கு ஆகும். மெட்ரோ ரயில் வளாகங்கள் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்டங்களை இணைத்தல், இது 5 முதல் 6 கி.மீ., தொலைவை கொண்டிருக்கும் என சித்திக் தகவல் அளித்துள்ளார்.
இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படும் என அதிகாரி தகவல்
மேலும் இதுகுறித்து சித்திக் கூறுகையில், இந்திய ரயில்வே தொடர்பிலிருந்து மெட்ரோலைட் திட்டம் சற்று வித்தியாசமானது. இது முந்தையகாலத்தில் இருந்த ட்ராமின் மேம்படுத்தப்பட்ட அம்சமாகவோ அல்லது தற்போதைய மெட்ரோ ரயிலில் உள்ள பெட்டிகளில் உள்ள வசதிகள் சற்றுகுறைந்த அம்சமாக இருக்கக்கூடும். இது தரையில் இயங்கும் வசதியுடன் தனித்துவமான தண்டவாளங்களில் சாலையிலிருந்து வேலி அல்லது சுவரால் பிரிக்கப்பட்டு தனிபாதையில் இயக்கப்படும். இதுக்கான நிதிஆதாரம் இன்னும் ஓரிரு நாட்களில் உறுதி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தின்கீழ், மெட்ரோ மூன்றாம் கட்ட பணிகள் ஒன்று சாதாரண மெட்ரோ ரயில் திட்டமாகவோ அல்லது மெட்ரோலைட்டாகவோ இருக்கலாம். இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படும் என்று இந்த திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரியான சியூஎம்டிஏ அதிகாரி ஐ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.