டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு
அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட இரண்டு தொடர் நிலநடுக்கங்களைத் அடுத்து, டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு இன்று(அக் 3) மதியம் 2:51 மணியளவில் உணரப்பட்டது. நேபாளத்தில் 4.6 ரிக்டர் அளவு மற்றும் 6.2 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி நேபாளத்தில் 5 கிமீ ஆழத்தில் இருந்ததாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின்(NCR) பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. உத்தரபிரதேசத்தின் லக்னோ, ஹப்பூர் மற்றும் அம்ரோஹா ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.