சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ'க்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம் - தமிழக முதல்வர்
சிங்கப்பூரில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் மூலம் சிறந்த முறையில் வரவேற்பு நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் சீர்திருத்தங்களை கொண்டு வந்த நாடு ஆகும். அந்த அளவிற்கு இந்நாட்டினை உலகே வியக்குமாறு முன்னேற்றியவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ. இவர் சிங்கப்பூரை மட்டுமல்லாமல் சிங்கப்பூரில் உள்ள தமிழர்களையும் உயர்த்தியவர். சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் இவருக்கு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெறவுள்ள உலக தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு சிங்கப்பூர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.