தமிழக மின் பகிர்மான கழகம் 2025-26 ஆண்டறிக்கை: ₹1,526 கோடி லாபம் ஈட்டி சாதனை
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசின் மின் வாரியத்தின் கீழ் இயங்கும் முக்கியத் துணை நிறுவனமான தமிழக மின் பகிர்மான கழகம், 2025 - 26-ஆம் நிதி ஆண்டிற்கான வரவு-செலவு கணக்குகள் அடங்கிய ஆண்டறிக்கையை வெளியிள்ளது. இந்த ஆண்டறிக்கையின்படி, மின் பகிர்மான கழகம் 2025-26 நிதி ஆண்டில் ₹1,526.57 கோடி லாபம் ஈட்டி நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள வீடுகள், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் செய்யும் முதன்மைப் பணியை மேற்கொண்டு வரும் மின் பகிர்மான கழகத்தின் 2025-26 கணக்கு விவரங்கள் படி, மின் கட்டண வசூல் மற்றும் தமிழக அரசின் மானியம் வாயிலாக ₹1,02,036.50 கோடி (சுமார் ₹1.02 லட்சம் கோடி) மொத்த வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.
செலவு
மின் கொள்முதல் செலவு மட்டும் ₹72,348 கோடி
கடந்த நிதி ஆண்டின் மொத்த செலவினங்களில், மாநிலத்திற்குத் தேவையான கூடுதல் மின்சாரத்தை பல்வேறு பொது மற்றும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ததற்கான செலவு மட்டுமே ₹72,348 கோடியை எட்டியுள்ளது என ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதில் நுகர்வோருக்கு நேரடியாக மின் விநியோகம் செய்து வருவாய் ஈட்டும் பணியை மின் பகிர்மான கழகம் மட்டுமே கவனித்து வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாகக் கடனில் இயங்கி வந்த மின் பகிர்மான கழகம், கட்டண சீரமைப்பு மற்றும் திறமையான நிதி நிர்வாகத்தின் மூலம் ₹1,526 கோடி லாபப் பாதைக்குத் திரும்பியுள்ளது முக்கிய வளர்ச்சி மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.