
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை பதவியிலிருந்து நீக்கிய பகுஜன் சமாஜ் கட்சி
செய்தி முன்னோட்டம்
சென்னையில், தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது.
அவரின் மரணத்துக்குப் பிறகு, அவரது மனைவியான பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார், அதே நேரத்தில் ஆனந்தன் மாநில தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது, பொற்கொடி தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டு, மாநில தலைவர் ஆனந்தன் தன்னை எதிர்த்து காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் என மேலிடத்திற்கு புகார் அளித்தார்.
இந்த புகார் கட்சியினுள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, கட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக பொற்கொடியை பதவியிலிருந்து நீக்கியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN | பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம்
— Sun News (@sunnewstamil) April 15, 2025
பொற்கொடி இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார் எனவும், மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தல்#SunNews | #BSP |… pic.twitter.com/pWbllCt3jK