
கரூர் தவெக கூட்ட நெரிசலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியல் வரலாற்றில் துயரச் சம்பவமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை (செப்டம்பர் 27) கரூரில் நடந்த இந்தப் பேரணியில், உயிரிழந்தவர்களில் பல குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் பங்கேற்ற இந்தக் கூட்டத்திற்கு, அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பன்மடங்கு அதிகமாக, சுமார் 60,000 பேர் திரண்டதே இந்தச் சோகத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இரங்கல்
பிரதமர் மோடி இரங்கல்
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக வருத்தம் தெரிவித்ததுடன், நிலைமையைக் கட்டுப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இதர அமைச்சர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி, மீட்பு மற்றும் மருத்துவப் பணிகளை மேற்பார்வையிட உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கரூர் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்த பிரதமர் மோடியும் கரூர் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
பிரதமர் மோடி இரங்கல்
தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற…
— Narendra Modi (@narendramodi) September 27, 2025
ட்விட்டர் அஞ்சல்
முதல்வர் ஸ்டாலின் கவலை
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 27, 2025
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி,
முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் - மாவட்ட…