தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்கிறது - சட்டசபையில் நிறைவேற்றம்
தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டிலிருந்து முத்திரைத்தாள் கட்டணமானது மாற்றியமைக்காமல் இருந்துள்ளது. இதனால் நீதித்துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்து உள்ளதால் முத்திரை தாள் கட்டணத்தினை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து சட்டசபையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில், மாற்றியமைக்கப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தில் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் ரூ.1000ஆகவும், 20 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இதே போல் நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் கட்டணம் 500 ரூபாயும், நிறுவன ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.