
காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு
செய்தி முன்னோட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பத்தூரில் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தில் தேசிய இளைஞர் மேம்பாட்டு கணினி அறிவியல் ஒருங்கிணைந்த மாநாடு நடந்தது.
இந்நிறுவன வளாகத்தில் தான் இந்த மாநாட்டின் தொடக்க விழா அரங்கேறியது.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உத்திரகாண்ட் மாநில தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் லலித்குமார் அவஸ்தி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடக்கி வைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
புத்தக வடிவில் வெளியீடு
வேகமாக மாறிவரும் கணினி அறிவியல் துறை
தொடர்ந்து இவ்விழாவில் பேசிய அவர், உயர்கல்வி நிறுவனங்களில் கணினி அறிவியல் துறை மாநாடுகள் நடத்தப்படுவது மிகவும் அவசியமான ஒன்று என்று தெரிவித்தார்.
மேலும் அவர், வேகமாக மாறிவரும் கணினி அறிவியல் துறையில் என்ன நடக்கிறது? என்பதனை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் முழுவதுமாக தெரிந்துகொள்வது அவசியமாகும்.
அதற்கு இது போன்ற மாநாடுகள் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து இந்த மாநாட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளை பேராசிரியர் லலித் குமார் அவஸ்தி மற்றும் பேராசிரியர் சஞ்சீவ் குமார் ஆகியோர் அதனை புத்தக வடிவில் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.