தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது
செய்தி முன்னோட்டம்
நேற்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 19 ஆதீன குருமார்கள் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆதீனத் தலைவர்கள் மற்றும் ஓதுவார்களை(தமிழ் பாடகர்கள்) சிறப்பு விமானத்தில் அழைத்து சென்ற மத்திய அரசு, கடந்த மூன்று நாட்களாக அவர்களின் அன்றாட சடங்குகளுக்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது.
தருமபுரம், மதுரை, திருவாவடுதுறை, குன்றக்குடி, பேரூர் மற்றும் வேளாக்குறிச்சி ஆகிய 6 ஆதீன தலைவர்களும் கண்டிப்பாக விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்க வேண்டும் என்று குறிப்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.
தமிழ் கீர்த்தனைகள் ஒலிக்க நேற்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடந்து முடிந்தது.
விழாவின் போது, தமிழகத்தின் செங்கோல், மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் பிரதமர் மோடியால் நிறுவப்பட்டது.
details
பல பழங்கால ஆதீனங்கள் ஆதரவு இல்லாததால் மறைந்துவிட்டன: தருமபுர மடம்
பிரதமர் மோடிக்கு செங்கோலை பரிசாக வழங்கிய ஆறு ஆதீனங்களில் நான்கு ஆதீனங்கள் 400 ஆண்டுகாலமாக தமிழகத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"பல பழங்கால ஆதீனங்கள் ஆதரவு இல்லாததால் மறைந்துவிட்டன, அதனால்தான் பிரதமர் எங்களை அழைத்து கவுரவிப்பது, எங்களை பின்பற்றுபவர்களை உற்சாகப்படுத்துவதோடு, எங்கள் மத நடவடிக்கைகளை அதிகரிக்கவும் உதவும்" என்று தருமபுரம் மடத்தின் மூத்த வழக்கறிஞர் எம்.கார்த்திகேயன் கூறினார்.
ஆதீனங்கள் என்பது தமிழ் வழிபாட்டு முறைகளுடன் சிவனை வழிபடும் மடங்கள் ஆகும்.
இந்த குருமார்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர்.
திருவாவடுதுறை, தருமபுரம் மற்றும் மதுரை ஆகிய மூன்று இடங்களில் உள்ள ஆதீனங்கள் மிக பழமையானவைகளாக கருதப்படுகிறது.