Loading...
ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! போனில் பாட்டு, ரீல்ஸ் சத்தமாகப் பார்த்தால் நேராக ஜெயில்தான்
ரீல்ஸ் பார்ப்போர் மற்றும் கேம் விளையாடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! போனில் பாட்டு, ரீல்ஸ் சத்தமாகப் பார்த்தால் நேராக ஜெயில்தான்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2026
11:25 am

செய்தி முன்னோட்டம்

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணம் செய்யும்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மொபைல் போனில் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாட்டுகள் கேட்போர், ரீல்ஸ் பார்ப்போர் மற்றும் கேம் விளையாடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி அளித்துள்ள பேட்டியின் அடிப்படையில், சக பயணிகளின் புகார்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விவரங்கள்

புதிய விதிகளும் தண்டனை விவரங்களும்

திருத்தப்பட்ட ரயில்வே சட்டப் பிரிவுகள் மற்றும் ஜன விஷ்வாஸ் சட்டத்தின் கீழ், பொதுமக்களுக்குத் தொந்தரவு தரும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தண்டனை வழங்கப்பட உள்ளது.

ரயில்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ ஹெட்போன் இல்லாமல் போனில் சத்தமாக பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது போன்ற செயல்களால் சக பயணியருக்குத் தொல்லை கொடுத்தால், ரூ. 1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இந்த அபராதத்தை டிக்கெட் பரிசோதகர் (TTE) அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரம் கொண்ட வணிகப் பிரிவு அலுவலர்கள் வசூலிக்கலாம்.

எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து தொந்தரவு அளித்தால் அபராதத் தொகை ரூ. 5,000 வரை அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT