
சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சலின் அறிகுறிகளுடன் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தொடங்கியதில் இருந்து, சோனியா காந்தி 3வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி, வைரஸ் சுவாச தொற்றுக்கான சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு, காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி மீண்டும் அதே மருத்துவமனையில் மார்ச் 2, 2023 அன்று அனுமதிக்கப்பட்டார்.
Embed
லேசான காய்ச்சலுடன் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி
Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi has been admitted to Delhi's Sir Gangaram Hospital with symptoms of mild fever. She is under doctors' observation and is currently stable: Sources pic.twitter.com/9uuZz8n4ra— ANI (@ANI) September 3, 2023